சென்னையில் அடுத்த 6 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும்... பகீர் கிளப்பும் ராதாகிருஷ்ணன்..!

By vinoth kumarFirst Published May 10, 2020, 12:20 PM IST
Highlights

கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்கள் போல செயல்பட வேண்டும் என்று கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்கள் போல செயல்பட வேண்டும் என்று கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ராயபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்கள் போல செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், பேசிய அவர் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. சென்னையில் கோயம்பேடு சந்தை மற்றும் வட சென்னையில் கூடுதலாக 19 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு அதிகமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வட சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை பரிசோதிக்கிறோம். நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்க பரிசோதனை செய்யாமல் இருப்பதில்லை. நாள்தோறும் கன்காணித்து 3,500 பேரை பரிசோதிக்கிறோம். தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகம். 52 பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னையில் தான் அதிகமாக பரிசோதிக்கிறோம். உள்ளாடை அணிவது போல முகக்கசவம் அணிவது கட்டாயம் என்று கூறியுள்ளார்.

சென்னையில் குடும்பங்களில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். இதில், பலருக்கும் அறிகுறிகள் இல்லை, இது நல்ல செய்தி. பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ள நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், மூச்சுத்திணறல் உள்ளவர்கள், முதியவர்களுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்கிறோம். அடுத்த ஒரு வார காலத்திற்கு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொள்ளப்படும் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

click me!