கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை... தமிழக அரசுக்கு அதிரடி ஆணை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 07, 2021, 06:25 PM IST
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை... தமிழக அரசுக்கு அதிரடி ஆணை...!

சுருக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து பரிசிலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    

கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவின்படி, ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிட  கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குடும்ப அட்டை வைத்திருக்கும் 2 ஆயிரத்து 596 மூன்றாம் பாலினத்தவர்  உள்ளிட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு அரசின் 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவியின் முதல் தவணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


குடும்ப அட்டை இல்லாத 8 ஆயிரத்து 493 மூன்றாம் பாலினத்தவருக்காக மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம் மூலமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதிகள், தடுப்பூசி செலுத்துவதில் மூன்றாம் பாலினத்தவ முன்னுரிமை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?
Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!