தடுப்பூசி போடாவிட்டால் கோயம்பேடு சந்தைக்கு அனுமதி இல்லை.. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்..!

By vinoth kumarFirst Published Jun 6, 2021, 7:06 PM IST
Highlights

ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார். 

ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார். 

சென்னை கோயம்பேடு சந்தையில் தூய்மை பணிகள் நடைபெற்றதை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் உட்பட 6,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபாரம் முடிந்த பின் கோயம்பேடு சந்தையில் தூய்மைப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பகல் 12 மணி முதல் இரவு வரை குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடக்கும். மே மாதத்தில் மட்டும் கோயம்பேட்டில் உள்ள 9003 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

மேலும், ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வை  இன்றிமையாகத் தேவைகளுக்கு மட்டுமே  பயன்படுத்த  வேண்டும். தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!