யூனிபார்ம் கழட்டுறேன் பாக்குறியா.. மாஸ்க் அணிய சொன்ன போலீசாரை ஒருமையில் பேசிய பெண் அட்வகேட்...!

By vinoth kumarFirst Published Jun 6, 2021, 6:11 PM IST
Highlights

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணுக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாயார் போக்குவரத்து போலீசாரை தகாத வார்த்தையால் ஒருமையில் பேசிய மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணுக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாயார் போக்குவரத்து போலீசாரை தகாத வார்த்தையால் ஒருமையில் பேசிய மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் போக்குவரத்து காவலர்கள் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்துள்ளனர். காரில் இருந்த பெண் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதன்காரணமாக ரூ.500 அபராதம் விதிப்பதாக போக்குவரத்து போலீசார் அந்தப்பெண்ணிடம் கூறியுள்ளனர். 

இதனால், ஆத்திரமடைந்த அந்தப்பெண் தனது தாயாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு காரில் வந்த அந்த பெண்ணின் தாயார் அங்கு நடந்தவற்றை எதுவும் விசாரிக்காமல் போக்குவரத்து போலீஸாரை நோக்கி ஒருமையில் பேசத்தொடங்கினார். தான் ஒரு வழக்கறிஞர் என்னால் அபராதம் கட்ட இயலாது என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். 

மாஸ்க் அணிந்து பேசுமாறு அந்தப்பெண்ணை போலீசார் அறிவுறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அந்த பெண் மாஸ்க் அணியமுடியாது. நான் யார்ன்னு காட்டுறேன். யூனிபார்ம் கழட்டுறேன் பாக்குறியா என போலீசாரை நோக்கி ஒருமையில் பேசினார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வழக்கறிஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பெண் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

click me!