வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. சென்னையில் நாளை இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.!

By vinoth kumar  |  First Published Mar 2, 2024, 12:34 PM IST

CMRL நிலையங்களின் கட்டுமான பணிக்காக 1. அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம் 2. நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் 3. ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 03.03.2024 ஒரு நாள் மட்டும் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு பகுதிகளில் நாளை ஒரு நாள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கீழ்கண்ட CMRL நிலையங்களின் கட்டுமான பணிக்காக 1. அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம் 2. நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் 3. ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 03.03.2024 ஒரு நாள் மட்டும் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: Aavin Ice Cream : ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா? கடுமையாக எதிர்க்கும் பால் முகவர்கள்..!

* சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு - ஹாடோஸ் ரோடு - உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் திருப்பி விடப்படும். இந்த மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.

* இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள். உத்தமர் காந்தி சாலை டாக்டர் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* அமைந்தக்கரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (LeftTurn) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.

* வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு தங்கள் இலக்கை அடையலாம்.

*  மற்ற பிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து மாற்றப்படும். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  அடேங்கப்பா.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயில்களில் இத்தனை லட்சம் பேர் பயணமா? வரலாற்று சாதனை!

click me!