அடேங்கப்பா.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயில்களில் இத்தனை லட்சம் பேர் பயணமா? வரலாற்று சாதனை!

By vinoth kumar  |  First Published Mar 2, 2024, 12:02 PM IST

சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. 


சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஜனவரி மாதத்தைவிட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: Aavin Ice Cream : ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா? கடுமையாக எதிர்க்கும் பால் முகவர்கள்..!

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது;  01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 09.02.2024 அன்று 3,26,786 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி  35,05,644 பயணிகள் (Online QR 2,12,344; Static QR 2,32,315; Paper QR 21,29,890; Paytm 3,82,549; Whatsapp - 3,70,008; PhonePe – 1,76,751; ONDC – 1,787), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,94,639 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 28,640 பயணிகள், குழு  பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,959 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 11,80,126 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. 4வது வரமாக தொடரும் பராமரிப்பு பணிகள் - தவிக்கும் மக்கள்!

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!