சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் தரித்த நிலையில் இது தொடர்பாக 3 இளைஞர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு தந்தை இராயபுரம் அரசு ஆர் எஸ். ஆர். எம் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் இராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினரின் விசாரணையில் கர்பமாக இருப்பதற்கு அண்ணன் உறவு முறையான மனோஜ்(வயது 24), அஜய் (27), கண்ணா (22) என இவர்கள் மூவர் தான் காரணம் என தெரிவித்தார். இதனையடுத்து மனோஜை இராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8ம் வகுப்பு சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.