சென்னை ஈ.வே.ரா. சாலையில் மீண்டும் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!

By SG Balan  |  First Published Apr 11, 2024, 10:55 PM IST

சென்னை ஈ.வே.ரா. சாலையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 10 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Traffic changes on Chennai EVR road on 13th and 14th of April sgb

சென்னை ஈ.வே.ரா. சாலையில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இரண்டு நாட்கள் அந்த வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Tap to resize

Latest Videos

ஈ.வே.ரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (நாயர் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து, 13.04.2024 மற்றும் 14.04.2024 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 10 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ள உள்ளதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே 13.04.2024 மற்றும் 14.04.2024 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 10 மணி முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

ஈ.வே.ரா சாலையில் ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல இயலாது.

அத்தகைய வாகனங்கள் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து, நேராக ஈ.வே.ரா சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பு, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பில் வலது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லலாம்.

எழும்பூர் காந்தி இர்வின் சாலை மற்றும் காவல் ஆணையாளர் சாலை சந்திப்பிலிருந்து (உடுப்பி பாயின்ட்), டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை நோக்கி செல்ல கூடிய வாகனங்கள் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம்.

இவ்வாறு  சென்னை போக்குவரத்து காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image