பிரதமர் மோடி நாளை (ஏப்.8) சென்னை வருவதையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளை (ஏப்.8) சென்னை வருவதையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்லாவரத்திலிருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படுகிறது. GST சாலையில் தாம்பரம், குரேம்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம். கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருநீர்மலை மேம்பாலம் வழியாக 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு.
இதையும் படிங்க: மக்களுக்கான திட்டங்களை கொண்டு வருவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் - அமைச்சர் குற்றச்சாட்டு
காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைபாக்கம் மார்க்கமாகவோ சென்னைக்கு செல்லலாம். GST சாலை பெருங்களத்தூரிலிருந்து தாம்பரம். பல்லாவரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தாம்பரம் மேம்பாலம் வழியாக வலது புறம் திரும்பி வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர், சந்தோஷபுரம், பள்ளிக்கரணை வழியாக சென்னைக்கு செல்லலாம்.
இதையும் படிங்க: மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்… ஆளுநர் குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து!!
GST சாலை செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் வண்டலூர் வெளிவட்ட சாலை(ORR) வழியாக சென்னைக்கு செல்லலாமம். கிஷ்கிந்தா சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் வெளிவட்ட சாலை(ORR) வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம். எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.