நேற்று இரவு முதல் சென்னையில் மழை அளவு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிந்து வருகிறது. சென்னை கிண்டியில் இடுப்பளவிற்கு நின்ற வெள்ளம் முழுவதும் வடிந்தது.
4 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் கோயம்பேடு - வடபழனி இடையே போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வங்கக் கடலில் நிலவி வந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தியது. குறிப்பாக இடைவிடாது பெய்த அதிகனமழையால் தலைநகர் சென்னையை புரட்டிபோட்டது. மிக்ஜாம் புயலால் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 36 மணி நேரத்துக்கும் மேல் கொட்டி தீர்த்த பெருமழையால் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தீவாக மாறியது. திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதன் காரணமான ரயில், போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- ரொம்ப கேவலமா இருக்கு மேயர் பிரியா.. எம்எல்ஏ காணோம்.. வரி என்னாச்சு.! கடுப்பான நடிகர் விஷால்..
மழைநீர் தேங்கி சாலை இருக்கும் இடம் தெரியாமல் தீவு போல் காட்சியளித்தது. இதனால், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் மழை அளவு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிந்து வருகிறது. சென்னை கிண்டியில் இடுப்பளவிற்கு நின்ற வெள்ளம் முழுவதும் வடிந்தது. தண்ணீர் தேங்கியுள்ள ஒரு சில இடங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க;- Chennai Heavy Rain:தலைநகரை தலைகீழாக புரட்டிபோட்ட கனமழை! மீண்டும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம்!
குறிப்பாக சென்னையில் முக்கிய சாலையான கோயம்பேடு - வடபழனி இடையே உள்ள சாலையில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.