சென்னையில் இடைவிடாமல் பெய்த மழையால் கிண்டி, வேளச்சேரி, பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலை, மேற்கு மாம்பலம், லஸ் ஆகிய பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக சென்னையில் இடைவிடாமல் பெய்த மழையால் கிண்டி, வேளச்சேரி, பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ரொம்ப கேவலமா இருக்கு மேயர் பிரியா.. எம்எல்ஏ காணோம்.. வரி என்னாச்சு.! கடுப்பான நடிகர் விஷால்..
தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்ததால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. எந்த அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிகயைாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பழுதடைந்த இடங்களில் மின் ஊழியர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
எப்போது மின்சாரம் வரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துணை மின் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரத்தை பாதுகாப்பாக கையாளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மழை குறைந்த பிறகு எந்த தங்கு தடையுமின்றி மின்சாரம் வழங்கப்படும். அதுவரை மக்கள் சற்று பொறுமை காக்கவேண்டும் என வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.
இதையும் படிங்க;- போர்க்கால அடிப்படையில் நிவாரணம்... 7 அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில், மழை குறைந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு , SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S & P பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட CMBTT, ICF, இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை தெற்கு - I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு - II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதி.