ஓணம் 2023 : சென்னையில் உள்ள மலையாள மக்களுக்கு குட்நியூஸ்.. நாளை உள்ளூர் விடுமுறை..

Published : Aug 28, 2023, 10:07 AM ISTUpdated : Aug 28, 2023, 10:10 AM IST
ஓணம் 2023 : சென்னையில் உள்ள மலையாள மக்களுக்கு குட்நியூஸ்.. நாளை உள்ளூர் விடுமுறை..

சுருக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். எனவே மகாபலி மன்னனுக்கு அத்தப்பூ கோலமிட்டு, வீட்டை அலங்கரித்து கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையோர மாவட்டங்களில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை ஓணம் பண்டிகையை ஒட்டி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர சரவென குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி, காய்கறிகளின் விலை என்ன தெரியுமா.?

அந்த வகையில் ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னை மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர்  இந்த நிலையில்  ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருணா விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் செப்டம்பர் 2ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?