தமிழகத்தில் 2 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள நிலையில் உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கங்கள் மூலம் அவற்றை சரி செய்யலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள எம்.வி மருத்துவமனையின் நிறுவனர் விஸ்வநாதனின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு இலவச முழு உடல் பரிசோதனை திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நீரழிவு மற்றும் அதன் சிக்கல்கள் பற்றி விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
நீரிழிவு நோய்க்கான காரணங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான தீர்வினை மக்கள் பெற வேண்டும். மேலும் இதன் இலவச முழு உடல் பரிசோதனை ஏழை எளிய பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்நிகழ்ச்சியின் இறுதியில் மருத்துவமனை சார்பாக 100 மரக்கன்றுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது, இந்தியாவில் 10 கோடி மக்களுக்கு மேல் சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 2 கோடி பேருக்கு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வாழ்வியல் முறை, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இதனை நாம் தவிர்க்க முடியும் என்றார்.
திமுகவின் தங்க தமிழ்செல்வனை வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்
மேலும் தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பு குறித்து பேசுகையில், தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து எங்கிருந்து பிடிக்கப்பட்டதோ அங்கேயே விட வேண்டிய சட்ட சிக்கல் உள்ளது. தெருநாய்களை கட்டுபடுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களை நாய்கள் விரட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் அனைத்து தெருநாய்களையும் தத்தெடுக்க மக்கள் முன்வர வேண்டும் என்றார்.