எங்களையே ஏமாற்றுகின்றனர்…… மு.க.ஸ்டாலின் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களின் முதல் போராட்டம் அறிவிப்பு….!

By manimegalai aFirst Published Oct 11, 2021, 5:22 PM IST
Highlights

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி மதுரையில் தர்ணா போராட்டமும், அடுத்த மாதம் 10-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி மதுரையில் தர்ணா போராட்டமும், அடுத்த மாதம் 10-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சி என்றாலே அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் வாரி வழங்கப்படும். அதானாலேயே திமுக ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் என்பது அரிதான நிகழ்வாக இருக்கும். ஆனால் தற்போது ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று 4 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் இந்த அரசைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழுவினர், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கும் அரசாணையை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் கடந்த அதிமுக அரசை போலவே தற்போதைய அரசும் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்கவில்லை. இது மருத்துவர்களின் மரணத்தை அவமானப்படுத்தும் செயலாகும். அரசு மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க, அரசு மருத்துவர்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும் கார்ப்பஸ் பண்ட் நிதி கடந்த 2017-ல் இருந்து முறையாக வழங்கப்படவில்லை.

ஆகவே, அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி மதுரையில் தர்ணா போராட்டத்தையும், அடுத்த மாதம் 10-ம் தேதி, சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும் என்று மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தெரிவித்திருக்கிறது.

click me!