இன்னைக்கு ராத்திரி தண்ணீர் திறந்து விடுறாங்க… உஷாரா இருங்க மக்களே… ஆட்சியர் எச்சரிக்கை..!

By manimegalai aFirst Published Oct 9, 2021, 8:35 PM IST
Highlights

பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, துணிகளை துவைக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, துணிகளை துவைக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னையின் புறநகர் மாவட்டங்களில் பெய்த மழையால், சென்னைக்கு குடிநீர் ஆதாராமாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. தமிழ்நாட்டைப் போலவே ஆந்திரா, கர்நாடகாவில் கனமழை வெளுத்துவாங்குவதால் தமிழ்நாட்டிற்கான தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து இன்றிரவு முதல் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பள்ளிப்பட்டு பாலம் முதல் பூண்டி நீர்த்தேக்கம் வரை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தரைப்பாலங்களில் அதிகளவில் தண்ணீர் செல்லும் என்பதால் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆற்றில் கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

click me!