புற்றீசலாய் முளைத்த பொறியியல் கல்லூரிகளின் நிலை… ஒரே ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்காத கல்லூரிகள் பற்றி தெரியுமா?

By manimegalai aFirst Published Oct 9, 2021, 3:12 PM IST
Highlights

பொறியல் இளங்கலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் இரண்டாம் சுற்றில் 378 கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

பொறியல் இளங்கலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் இரண்டாம் சுற்றில் 378 கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் புற்றீசல் போல் முளைத்த பொறியியல் கல்லூரிகள் எல்லாம் தற்போது காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன. பொறியியல் இளங்கலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் கலந்தாய்வில் 20,438 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 440 கல்லூரிகளில் முதல் சூற்று கலந்தாய்வில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. இந்தநிலையில் இரண்டாம் சுற்று கலந்தாய்வில், சென்னை அண்ணா பல்கலைக் கழகம், எஸ்.எச்.என். பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி., சி.ஐ.டி, குமரகுரு பொறியியல் கல்லூரி, மதுரையில் தியாகராஜர் கல்லூரி, சேலத்தில் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 15 கல்லூரிகளில் 90 சதத்திற்கும் மேல் இடங்கள் நிரம்பியுள்ளன.

அதேவேளையில், 378 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் கீழ் மட்டுமே இடங்கள் நிரம்பியுள்ளன. 345 கல்லூரிகளில் இரட்டை இலக்கத்தில் மட்டுமே இடங்கள் நிரம்பியுள்ளன. சுமார் 150-க்கும் அதிகமான கல்லூரிகளில் இரண்டாம் கலந்தாய்வில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். எல்லாவற்றிர்க்கும் உச்சமாக 71 கல்லூரிகளில் ஒரு இடத்தை கூட மாணவர்கள் இதுவரை தேர்வு செய்யவில்லை.

click me!