அதிரடியில் இறங்கியது அரசு... பாறையா.? நாங்களா..? ஒருகைப்பாக்குறோம்..!! அதை சுக்கு நுறா உடைத்து சுர்ஜித்தை தூக்காமல் விடமாட்டோம். முரட்டுத்தன வெறியில் மீட்புக்குழு..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 28, 2019, 2:18 PM IST
Highlights

பலதரப்பு ஆலோசனைகளையும்  கேட்டு முடிவு எடுக்கப்பட்டு வருவதுடன் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்றார்.  குழந்தையின் பெற்றோர்களுக்கு தொடர்ந்து  மனநல ஆலோசகர்கள் ஆலோசனை கொடுத்து  வருகின்றனர். குழந்தையை மீட்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஆலோசனை வழங்கலாம் என்றார். அதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என்றார். 
 

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்க பலூன் முறையை ஏன் பயன்படுத்தவில்லை என சமூகவலைதளத்தில் பலர் கேள்வி  எழுப்பி வரும் நிலையில்  பலூன்  முறையைப் பயன்படுத்தும் அளவிற்கு  சிறுவன்  சுர்ஜித் சிக்கியுள்ளான் எனவும், நான்கரை இன்ச் போர் குழியில் பலூனை செலுத்த கூட இடமில்லை எனவும் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

 இந்நிலையில் ஆழ்துளையில் சிக்கியுள்ள  சுர்ஜித்தை மீட்கும் பணி நான்கு நாட்களாக தொடர்ந்து வருகிறது. மீட்புக்குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் நான்கு நாட்கள் ஆகியும் குழந்தையை மீட்கப்பட முடியவில்லையா..?  என மக்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சித்துவருகின்றனர். அத்துடன்  தமிழகமே தொலைக்காட்சிக்கு முன்பாகவே அமர்ந்து சுஜித் மீட்ப்பை  எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ஒரு குழந்தையை மீட்க இத்தனை நாட்களாக என அதிருப்பதி தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். 

அதாவது இயந்திரங்கள் மூலம் நடைபெறும் பணி திருப்தியளிக்கவில்லை,  பல்வேறு வழிகள் மூலம் குழந்தையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆனாலும் தொடர்ந்து  குழி தோண்டப்பட்டுவரும் நிலையில் திடீரென பாறை குறுக்கிட்டுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் மீட்பு பணியை கைவிடும் திட்டம் ஏதும் இல்லை எனவும் , சவாலை சமாளிக்க  எப்படிப்பட்ட தொழில்நுட்பத்தையேனும் பயன்படுத்தி  குழந்தை மீட்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார். பலதரப்பு ஆலோசனைகளையும்  கேட்டு முடிவு எடுக்கப்பட்டு வருவதுடன் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்றார்.  குழந்தையின் பெற்றோர்களுக்கு தொடர்ந்து  மனநல ஆலோசகர்கள் ஆலோசனை கொடுத்து  வருகின்றனர். குழந்தையை மீட்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஆலோசனை வழங்கலாம் என்றார். அதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என்றார்.

 

ஆழ்துளையில்  88 அடி ஆழத்தில் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளார். அதனால்  98 அடி ஆழம்வரை குழிதோண்டி சுர்ஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலர் பலூன் முறையை ஏன் பயன்படுத்தவில்லை.? அதை பயன்படுத்துமாறு கருத்து கூறிவருகின்றனர்.   பலூன்முறையை பயன்படுத்த முடியாத அளவிற்கு  சுர்ஜித் சிக்கியுள்ளார் எனவும் அது  வெறும் நான்கரை இன்ச் குழி என்பதால் பலூன் முறை பயன்படுத்த முடியவில்லை எனவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

click me!