மீட்பு பணியில் பயங்கர அதிர்ச்சி...!! சுர்ஜித்தின் தலைக்கு மேல் ஒர் அங்குலத்திற்கு படிந்துள்ளது மண்...!! இறுதி முடிவு எடுக்கும் நிலையில் அரசு..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 28, 2019, 1:23 PM IST
Highlights

இந்நேரத்திற்கு 90 அடி ஆழத்தை எட்டி,  குழந்தை மீட்கப்பட்டு இருக்கவேண்டும்,  ஆனால் பாறைகள் மிகக் கடினமாக இருப்பதால் அதை செய்ய முடியவில்லை பாறைகளை துளையிடுவதில் பெரும் சிரமம் உள்ளது என தெரிவித்துள்ளார்.  இதனால் தற்போதைய முயற்சி பலனளிக்குமா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தையை மீட்பதில்  இறுதிக்கட்ட முடிவு எடுக்கும் நிலையில் அரசு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குழந்தை மீட்பு பணியில் கடந்த மூன்று நாட்களாக சம்பவ இடத்திலிருந்து மீட்பு குழுவினருக்கும் அதிகாரிகளுக்கும் அவர் உத்வேகம் கொடுத்துவரும் நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்தார்.  அதில்,  குழந்தை மீட்பு பணி பெரும் சவாலாக மாறியுள்ளது.  வலிமையான பாறைகளை உடைக்கும் எந்திரங்கள் பழுதாகி உள்ளது.  பாறைகள் இவ்வளவு கடினமாக இருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.  இதுதொடர்பாக அனைத்து மண் பரிசோதனை வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை   நடத்தப்பட்டுவிட்டது ஐஐடி நிபுணர்கள்,  புவியியல் வல்லுனர்கள். பாறை மிக கடினமாக இருப்பதாக கூறியுள்ளனர்.  இதானல்  சுமார் 120 நியூட்ரான் திறன்கொண்ட எந்திரங்களும் பாறைகளை உடைப்பதில் திணறுகின்றன. என்றார்.

இந்நேரத்திற்கு 90 அடி ஆழத்தை எட்டி,  குழந்தை மீட்கப்பட்டு இருக்கவேண்டும்,  ஆனால் பாறைகள் மிகக் கடினமாக இருப்பதால் அதை செய்ய முடியவில்லை பாறைகளை துளையிடுவதில் பெரும் சிரமம் உள்ளது என தெரிவித்துள்ளார்.  இதனால் தற்போதைய முயற்சி பலனளிக்குமா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் துணை முதலமைச்சர்  நிகழ்விடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அவர் அதிகாலை வரை அங்கேயே இருந்து வரும் நிலையில் நிலையில் ஆரம்பத்தில் வேகமாக நடந்த துளையிடும் பணி பிறகு கடின பாறையால் தொய்வை சந்தித்துள்ளது.  இந்நிலையில் தொடர்ந்து குழந்தையின் நிலைமை கண்காணிப்பு கேமரா மூலம் கண்கணிக்கப்பட்டுவரும் நிலையில் சுர்ஜித் தலை மீது ஒரு அங்குல அளவிற்கு மண் படிந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

குழந்தையின் நிலைமை குறித்து பெற்றோர்களிடம் தொடர்ந்து தகவல் சொல்லப்பட்டு வருவதுடன்,  மனநல மருத்துவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்படுகிறது.  இந்நிலையில் கடின பாறைகளை தாண்டி மாற்றுவழி என்ன என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர் குழுவுடன் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.  அரசும் தொழில்நுட்ப வல்லுநர்களும்  இறுதி முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதுடன் என்எல்சி, ஓஎன்ஜிசி  குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.  இந்நிலையில் குழந்தையின் நிலைமை குறித்து தடயவியல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசித்து வருவதுடன் குழந்தையை மீட்க உச்சபட்ச முயற்சி எடுக்கிறோம் ஆனால் பலன் குறைவாக உள்ளது எல்லா அமைச்சர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.  இறுதி நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் தொலைபேசிமூலமாக ஆலோசனை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!