மீட்புப் பணியில் அதிரடி சரவெடி... புது ஃபார்முலாவை கையிலெடுத்த அதிகாரி... பாறைகளை உடைத்தேனும் குழந்தையை தூக்காமால் விடமாட்டேன்... வைராக்கியம் காட்டும் வருவாய் ஆணையர்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 28, 2019, 12:47 PM IST
Highlights

ரிக் எந்திரம் பழுதான பட்சத்தில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு பணி தொடர்ந்து நீடித்து வருகிறது என்றதுடன். பணி வேகம் ,விவேகம், பாதுகப்பு, என்ற சுத்திரத்தின் அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. அத்துடன் அதிநவீன எந்திரம் கொண்டு ஆழ்துளைக்கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டும் பணி என்பது  கடினமான பாறை குறுக்கிட்டதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால்,  அதையும் உடைத்து விரைவில் ஆழ்துளை கிணறு தோண்டும் பணி நிறைவடைந்து.  அதிரடியாக குழந்தை மீட்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
 

குழந்தை மீட்பு பணி நடைபெற்று வரும் இடத்தில் ஆயிரக்கணக்கிலான பொது மக்களின் வருகை, பணிக்கு பெரும் இடையூறாக இருந்து வருவதுடன் மீட்பு பணியில் தாமதத்தை ஏற்படுத்தும் என வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மீட்புபணி நடைபெறும் இடத்திற்கு வருவதை தவித்து  குழந்தைக்காக வீடுகளில் பிரார்த்தனை மட்டும் செய்யுங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது குறித்து செய்தியாளர்ளை சந்தித்த  தமிழக வருவாய்த்துறை ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,  கடந்த 25ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு,  ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்த்தை மீட்கும் பணி தொடர்ந்து தொய்வின்றி நடந்து வருகிறது.  இதில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தாண்டி,  மாற்று வழியில் பணிகள் நடைபெற்று வருகிறது.  காவல்துறை,  தீயணைப்புத்துறை,  வருவாய்த்துறை,  உள்ளிட்ட அரசின் அனைத்து துறைகளும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் குழந்தையை மீட்பதில் அக்கறை காட்டி பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.

 

இந்தப் பணியை மிகவும் திறமை வாய்ந்த அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களான மதுரை மணிகண்டன்,  நாமக்கல் டேனியல்,  கோவை ஸ்ரீதர்,  நாமக்கல் வெங்கடேசன், புதுக்கோட்டை வீரமணி,  மற்றும் தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் இம்மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் கட்டுக்கடங்காமல் கூடி வருவதால் மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் மீட்புப்பணி  செய்யவரும்  பெரும் எந்திரங்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள்,  வேகள் வந்து செல்வதில்  சிக்கல் ஏற்படுகிறது.  எனவே பொதுமக்கள் குழந்தைக்காக  வீட்டிலிருந்தபடியே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ன ஒரு கேட்டுக்கொண்டுள்ள அவர் மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

 

அத்துடன்,  ரிக் எந்திரம் பழுதான பட்சத்தில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு பணி தொடர்ந்து நீடித்து வருகிறது என்றதுடன். பணி வேகம் ,விவேகம், பாதுகப்பு, என்ற சுத்திரத்தின் அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. அத்துடன் அதிநவீன எந்திரம் கொண்டு ஆழ்துளைக்கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டும் பணி என்பது  கடினமான பாறை குறுக்கிட்டதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால்,  அதையும் உடைத்து விரைவில் ஆழ்துளை கிணறு தோண்டும் பணி நிறைவடைந்து.  அதிரடியாக குழந்தை மீட்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

click me!