24 மணி நேரத்தில் சொன்னதைச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…… Made in Tamilnadu திட்டத்திற்கு அடித்தளம்….

By manimegalai aFirst Published Sep 23, 2021, 9:31 PM IST
Highlights

தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்க அதற்கென தனியாக மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்க அதற்கென தனியாக மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் நேற்றைய தினம் மாநாடு நடைப்பெற்றது. அதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Made In Tamilnadu  என்ற குரல் உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்வதே தமது அரசின் நோக்கம் என்றார். மேலும் ஏற்றுமதியை ஊக்குவிக்க மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

அறிவிப்பு வெளியிட்ட 24 மணி நேரத்தில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். தலைமைச் செயலர் இறையன்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், நிதி, வ்ளாண்மை, தொழில்துறை, கால்நடை மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவானது குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும்.  தொழில்துறை துறையின் செயலாளர் தலைமையிலான ஒரு நிர்வாக துணைக்குழுவும் செயல்படும். 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு தலைவருக்கு அறிக்கைகளை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!