பிரபல பெண் கவிஞரின் பாஸ்போர்ட் முடக்கம்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

Published : Sep 23, 2021, 09:03 PM IST
பிரபல பெண் கவிஞரின் பாஸ்போர்ட் முடக்கம்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

சுருக்கம்

பிரபல பெண் கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரபல பெண் கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரபல எழுத்தாளரும், பெண் கவிஞருமான லீனா மணிமேகலை சர்ச்சை கருத்துகளுக்கும் பெயர் போனவர் ஆவார். அவரது கருத்துகளாக் அடிக்கடி சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானாலும், தனது செயல்பாடுகளை அவர் ஒருபோதும் மாற்றிக்கொண்டதில்லை.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை பகிரங்கபடுத்தும் மீ டூ இயக்கம் பிரபலமான 2018-ல், லீனா மணிமேகலையும் மனம் திறந்து புகார் கூறினார். திருட்டு பயலே, கந்தசாமி திரைப்பாங்களை இயக்கிய சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக லீனா மணிமேகலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த் சுசி கணேசன், ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கு விசாரணையின்போதே லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் ஆராய்ச்சி பணிக்காக கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் செல்ல உள்ளதால் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!