வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்கள்… 28 ஆண்டுகளாகியும் நிவாரணம் கிடைக்காமல் கண்ணீர்…!

By manimegalai aFirst Published Sep 23, 2021, 8:48 PM IST
Highlights

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களுக்கு 28 ஆண்டுகளாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை.

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களுக்கு 28 ஆண்டுகளாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை.

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும்படி விடியல் மக்கள் கூட்டமைப்பினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 1993-ஆம் ஆண்டு வீரப்பனை பிடிப்பதற்காக தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநில அரசுகளும் கூட்டு ஒப்பந்தத்தின் பேரில் சிறப்பு அதிரடிப்படை ஒன்றை அமைத்து மலையோர கிராமங்களில் வீரப்பன் தேடி வந்ததை சுட்டிக்காட்டியுள்ளனர்.

 வீரப்பன் நடமாட்டமுள்ள மலையோர கிராம மக்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று சட்டவிரோதமாக முகாம்களில் வைத்து, சித்திரவதை, பாலியல் வன்முறை திட்டமிட்ட மோதல் சாவுகள், மேலும் பொய் வழக்கு போன்ற கொடுமைகள் செய்யப்பட்டதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதிரடிப்படை யால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்த சதாசிவா கமிட்டி அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர் , அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு நிவாரணம் வழங்க ஆணையம் உத்தரவிட்தை குறிப்பிட்டுள்ளார்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தியபோது வீரப்பனால் கோரிக்கை வைக்கப்பட்டு மலைகிராம மக்களுக்கு நிவாரணம் வழங்க இருமாநில அரசுகளும் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதில், ரூ.2.8 கோடியை கடந்த 2007-ல் வழங்கிய இருமாநில அரசுகள், 14 ஆண்டுகள் கடந்தும் மீதி தொகையை வழங்கவில்லை என்று மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த வழக்கு  வந்தது நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சிறப்பு அதிரடிப்பட யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய நிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசு இருவாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

click me!