முட்டாள் கிழவன்….. திமுக-வின் மூத்த தலைவரையே சகட்டுமேனிக்கு வசைபாடிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்..!

Published : Sep 23, 2021, 05:48 PM IST
முட்டாள் கிழவன்….. திமுக-வின் மூத்த தலைவரையே சகட்டுமேனிக்கு வசைபாடிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்..!

சுருக்கம்

திமுக எம்.பி.-யும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.எஸ். இளங்கோவனை, முட்டாள் கிழம், 2 கிலோ மீன் வாங்க தகுதியில்லாதவன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசைபாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்.பி.-யும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.எஸ். இளங்கோவனை, முட்டாள் கிழம், 2 கிலோ மீன் வாங்க தகுதியில்லாதவன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசைபாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அமைச்சர்களில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் பழனிவேல் தியாகராஜன். தொடக்க காலங்களில் ஆகா, ஓஹோ என்று புகழப்பட்ட அவரது டுவிட்டுகள் தற்போது சொந்தக் கட்சியினரே முகம் சுழிக்கும் அளவுக்கு மாறியுள்ளது.

கடந்த வாரம் லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடைசி நேரத்தில் கூட்டம் குறித்து தகவல் வந்ததாகவும், 3 விமானங்கள் மாறிச் செல்ல வேண்டும் என்பதோடு, முன்னரே வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உறுதியளித்ததால் செல்ல முடியவில்லை என்று கூறியிருந்தார். கொழுந்தியாவின் மகள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்ததால் ஜி.எஸ்.டி. கூட்டத்திற்கு செல்ல முடியவில்லை என்று அமைச்சர் கூறியதாக நெட்டிசன்கள் கொளுத்திப்போட இந்த விவகாரம் சர்ச்சையானது.

நெட்டிசன்களின் கருத்துகளை புறம்தள்ளிவிட்டு வேலையை பார்க்காமல், அதனை மேற்கோள் காட்டிய அனைவரையும் சகட்டு மேனிக்கு வசைபாடி வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்தநிலையில் தான் திமுக எம்.பி.-யும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.எஸ். இளங்கோவன், ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பழனிவேல் தியாகராஜன் குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டிருக்க வேண்டும், எதிர்க்கட்சி விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் பணியில் கவனம் செலுத்த பழனிவேல் தியாகாரஜனுக்கு அறிவுரை வழங்குவோம் என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருந்தார். ஆனால் அதற்கு பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பதிலடி பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முட்டாள் கிழம், 2 கிலோ மீன் வாங்க கூட விபரம் அறியாதவர், கட்சியின் இரண்டு தலைமைகளாலும் ஓரங்கட்டப்பட்டவர் என இளங்கோவனை கடும் சொற்களால் வறுத்தெடுத்திருக்கிறார் பழனிவேல் தியாகராஜன். அவரது கருத்துக்கு சொந்தக் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவிக்கவே அந்த பதிவை பின்னர் நீக்கிவிட்டார்.

பொறுப்பற்ற வகையில் பேசும் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பி.டி.ஆர். செயல்பாடுகள் குறித்து கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் மூத்த தலைவர்கள் புகார் கூறியதாகவும், அவரும் அமைச்சர் மீது அப்செட்டில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

அதிகாலையில் அலறிய சென்னை! சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொ**லை
ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!