Omicron: ஒமிக்ரான் வைரஸிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள இது ஒன்று தான் வழி... பிரதீப் கவுர்..!

By vinoth kumarFirst Published Nov 30, 2021, 5:56 PM IST
Highlights

ஒமிக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 2 டோஸ் தடுப்பூசி அவசியம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 2 டோஸ் தடுப்பூசி அவசியம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா முதல் அலையை இரண்டாவது அலை பெரும் பாதிப்பும் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும் தடுப்பூசியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உயிரிழப்பும் பெருமளவு குறைக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வீரியமாக பரவி வருவதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.  அவ்வகையில், தென்னாப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இது மிகவும் விரீயம் மிக்கதாகவும் தடுப்பூசி இதனை கட்டுப்படுத்தாது என்று கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தமிழக பிரிவின் துணை இயக்குனராக பணிபுரிந்து வரும் பிரதீப் கவுர்  தனது டுவிட்டர் பக்கத்தில்;- வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பில்  இருந்து மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.  இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொள்வதோடு கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!