7 மாவட்டங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்... வானிலை மையம் பகீர் தகவல்..!

By vinoth kumarFirst Published Nov 24, 2020, 1:34 PM IST
Highlights

நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நிவர்' புயல் சென்னையில் இருந்து 450 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே, புயல் கரையை கடக்கும். அப்போது, தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் 110 கிலோமீட்டர் வேகத்திலும், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி, காரைக்காலிலும் 100 முதல் 110 காற்று வீச வாய்ப்புள்ளது. 

 3 மாவட்டங்களில் இன்று அதீத கனமழை

நாகை, மயிலாடுதுறை, காலைக்கால் மாவட்டங்களில் இன்று அதீத கனமழை பெய்யும். அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூரில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். 

8 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை

நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்காலிலும்  அதீத கனமழை  பெய்யக்கூடும். 

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 9 செ.மீ., எம்ஜிஆர் நகர், வடசென்னையில் தலா 8 செ.மீ., விமான நிலையம், ஆலந்தூரில் 7 செ.மீ. கேளம்பாக்கத்தில் 6 செ.மீ., கொளப்பாக்கத்தில் 5 செ.மீ., வெரம்பூர், தரமணி 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

click me!