எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. மருத்துவர்களுக்கு அலர்ட் கொடுக்கும் சுகாதாரத்துறை செயலாளர்..!

By vinoth kumarFirst Published Nov 24, 2020, 11:48 AM IST
Highlights

இடி, மின்னல் பாதிப்பு, பாம்பு மற்றும் பூச்சு கடிகள் போன்றவற்றிற்கு  தேவையான மருந்துகளை தேவையான அளவில்  கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இடி, மின்னல் பாதிப்பு, பாம்பு மற்றும் பூச்சு கடிகள் போன்றவற்றிற்கு  தேவையான மருந்துகளை தேவையான அளவில்  கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

நிவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கிய அறிவுறுத்தல் பின்வருமாறு;- இடி, மின்னல் பாதிப்பு, பாம்பு மற்றும் பூச்சு கடிகள் போன்றவற்றிற்கு  தேவையான மருந்துகளை தேவையான அளவில்  கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்திலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும். ஜெனரேட்டர் உள்ளிட்ட மின்சாதனங்களை வைத்திருக்க வேண்டும். காய்ச்சல்களை கண்காணிப்பதுடன் உடனுக்குள் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண முகாம்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

click me!