சென்னைக்கு அருகே நிவர் புயல்... சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..!

Published : Nov 24, 2020, 09:06 AM IST
சென்னைக்கு அருகே நிவர் புயல்... சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..!

சுருக்கம்

வங்கக் கடலில்  உருவான நிவர் புயல் சின்னம் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருவானது. இன்று அது நிவர் புயலாக உருவெடுத்தது. தற்போது சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்தப் புயல் நாளை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனால். சென்னையில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut : சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Cut : சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு? - முழு விவரம்