#BREAKING குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... டாஸ்மாக் கடை திறக்கப்படும் நேரம் மாற்றம்..!

By vinoth kumarFirst Published May 5, 2021, 7:21 PM IST
Highlights

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை  அரசு அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாட்டின்படி நாளை முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஓட்டல்கள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர்த்து, பிறவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. தொற்று பரவல் காரணமாக பார்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை வழக்கமான நேரத்துக்கு திறக்கப்படுமா? அல்லது மூடப்படுமா என்ற கேள்வி  குடிமகன்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்நிலையில், காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

click me!