பேரதிர்ச்சி... தமிழகத்தையும் தாக்கிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ்... ஒருவருக்கு தொற்று உறுதி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 23, 2021, 06:08 PM ISTUpdated : Jun 23, 2021, 06:20 PM IST
பேரதிர்ச்சி... தமிழகத்தையும் தாக்கிய  டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ்... ஒருவருக்கு தொற்று உறுதி...!

சுருக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  உறுதிபடுத்தியுள்ளார். 

இந்தியாவில் பரவி வரும் ‘பி.1.617.2’ வைரஸுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டியுள்ளது. இந்த டெல்டா வைரஸ் இந்தியாவில் 2வது அலை தீவிரமடைய காரணம் எனக்கூறப்பட்டது. தற்போது உருமாறியுள்ள டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் எளிதாகவும், விரைவாகவும் பரவக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒருவருக்கு டெல்ட ப்ளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் டெல்டா ப்ளஸ் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநிலங்களில் டெல்டா ப்ளஸ்  கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மத்திய அரசு அறிவுறுத்தியது. 

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  உறுதிபடுத்தியுள்ளார். மரபியல் ரீதியாக ஆய்வு நடத்த ஏற்கனவே கொரோனா தொற்று வந்தவர்கள், தடுப்பூசி போட்ட பிறகும் தொற்றுக்கு ஆளானவர்கள், குழந்தைகள் என 8 வகையானவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரித்து அனுப்பப்பட்டன. அதில் சென்னையில் இருந்து அனுப்பட்ட ஒருவரது மாதிரியில் டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாதிரி எடுக்கப்பட நபர் சென்னையைச் சேர்ந்தவரா? அல்லது வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவரா? என கண்டறிந்து வருகிறோம் எனக்கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!