‘ஆக மொத்தம் பல்ப் எறியவில்லை’... எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு துரைமுருகன் கொடுத்த சுளீர் பதிலடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 23, 2021, 5:23 PM IST
Highlights

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மின் வெட்டை தடுக்க வேண்டுமென வைத்த கோரிக்கை மீது காரசார விவாதம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் பராமரிப்பு பணிகளால் மின்தடை இருப்பதாகவும், மின் வேட்டு இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். ஆளுநர் உரையில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் கொள் முதல் செய்து  மின்வெட்டை தடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த திமுக ஆட்சியில் மாநிலத்திலே சுமார் 7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கலைஞர்  மேற்கொண்டார். அதுவும் கடந்த அதிமுக ஆட்சியில் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி அளவிற்கு குறைந்ததது. அதோடு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல்  செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். 


இதனிடையே எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மொத்த உற்பத்தியை அதிகரிப்பது , நிர்வகிக்கும் திறன், நுகர்வோர் தேவை எப்படி உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  திமுக ஆட்சியில் மின் தடையை போக்க குறுகிய கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் நீண்ட கால ஒப்பந்தங்கள் போடப்பட்டதோடு, 9 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இப்படி குறைபாடுவுள்ள நிர்வாக திறனாக  இருந்தது. எனவே தான் முதலமைச்சர் ஆளுநர் உரையில் மின்சார துறையில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போது போதுமான மின்உற்பத்தி உள்ளது. பராமரிப்பு பணிகள் 9 மாதமாக நடைபெறததால் தான் மின் தடை உள்ளது. மின்வெட்டு இல்லை என்றும் அமைச்சர்  தெரிவித்தார். மீண்டும் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி,  தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மின் தடை தான் ஏற்பட்டது என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், அதிமுக ஆட்சியில் மின்தடை என்று கூறுகின்றனர், திமுக ஆட்சி காலத்தில் மின் வெட்டு என கூறுகின்றனர், இது தப்பித்துக்கொள்ள அரசுகள் கூறும் வார்த்தை, ஆக மொத்தம் பல்ப் எறியவில்லை என தெரிவித்தார்.

click me!