தமிழகத்தில் புதிதாகத் தலைதூக்கும் பரிசு கூப்பன் மோசடியில் சிக்காமல் விழிப்புணர்வோடு இருக்குமாறு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் பரிசு கூப்பன் விழுந்திருப்பதாகச் சொல்லி மோசடியில் ஈடுபடும் கும்பல் செயல்பட்டு வருவதாகவும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சைபர் கிரைம் குற்றவாளிகள் குற்றத்தின் வகைகளை நாள்தோறும் மாற்றிக்கொண்டு புது யுக்திகளில் மோசடியில் ஈடுபடுகிறார்கள். இப்போது, அமேசான் இணையதளத்தில் அந்நிறுவனத்தின் ஒன்பதாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு பரிசு போட்டி நடத்தியதாகவும் அதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் எனவும் வீட்டுக்குக் கடிதம் அனுப்பப்படுகிறது.
முதல் முறையாக மனிதருக்குப் பரவிய தாவரப் பூஞ்சை நோய்! மருத்துவர்கள் அதிர்ச்சி!
அமேசான் நிறுவனத்தின் லோகாவுடன் வரும் இந்தக் கடிதத்தில் ஸ்மார்ட் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஸ்மார்ட்போன், லேப்டாப், ரொக்க பணம் ஆகியவை பரிசாக வழங்கப்படும். கடிதத்துடன் ஒரு ஸ்கிராட்ச் கூப்பன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூப்பனை ஸ்கிராட்ச் செய்து அதில் உள்ள குறியீட்டு கடிதத்தில் உள்ள தொலைப்பேசி எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதை நம்பி அந்த தொலைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு பேசும்போது எதிர்முனையில் பேசுபவர், பரிசுப் பொருட்களை அனுப்புவதற்கு ஜி.எஸ்.டி. போன்ற பல வரிகள் செலுத்தவேண்டும் எனக் கூறுவார். அதன்படி வரிகளுக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தினால், பிறகு அந்தத் தொலைப்பேசி எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிடும். பின்னர் பரிசுப் பொருட்களும் வராது செலுத்திய பணத்தையும் அவர்களிடமிருந்து பெற முடியாது.
இது போன்றயில் மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
ஒரே முறை பிரிமீயம் செலுத்தினால் நிரந்தர பென்ஷன்... எல்ஐசியின் சூப்பர் பாலிசி!