ஏப்ரல் 20 முதல் ஊரடங்கில் தளர்வு..! போக்குவரத்து துறைக்கு அவசர சுற்றறிக்கை..!

By Manikandan S R SFirst Published Apr 18, 2020, 10:37 AM IST
Highlights

ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், இந்த மாதம் 20-ந்தேதியில் இருந்து தமிழகத்தில் கூடுதலாக சில நடவடிக்கைகளை அனுமதிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன் இந்த கூடுதல் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தும். இதற்கான அரசு உத்தரவில், அனைத்து அரசுத் துறைகளும் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களைக் கொண்டு இயங்கலாம். 

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. தினமும் 600 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 378 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு அமலில் இருந்த ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். எனினும் பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி ஊரடங்கு விதிகளை பின்பற்றி போக்குவரத்து சேவையளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், இந்த மாதம் 20-ந்தேதியில் இருந்து தமிழகத்தில் கூடுதலாக சில நடவடிக்கைகளை அனுமதிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன் இந்த கூடுதல் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தும். இதற்கான அரசு உத்தரவில், அனைத்து அரசுத் துறைகளும் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களைக் கொண்டு இயங்கலாம்.

தேவைக்கு ஏற்ப, ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் வந்து பணியாற்றலாம். பி மற்றும் அதற்கு கீழ் உள்ள பிரிவு அலுவலர்களில் 33 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கிடையேயான சமூக இடைவெளி உறுதி செய்யப்பட வேண்டும். எப்படி என்றாலும், பொதுமக்களுக்கு சேவை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தேவையான அளவுக்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியும், சூழ்நிலையை கருத்தில் கொண்டும், போக்குவரத்துத் துறை இணை மற்றும் துணை ஆணையர்கள், மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!