செமஸ்டர் தேர்வுகள் ரத்து... தமிழக அரசை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Apr 17, 2020, 2:03 PM IST
Highlights

 கலை - அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட் அனைத்து வகையான கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. 

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தில் கூறியுள்ளது. 

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், கொரோனாவை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலை - அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட் அனைத்து வகையான கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. 

இந்நிலையில், தமிழக அரசை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செமஸ்டர் தேர்வுகள் தமிழகத்தில் உள்ள 540க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இந்த உதத்ரவு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், இளநிலை, முதுகலை பொறியியல் செய்முறை பயிற்சியும் செய்ய தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்புகள் தொடக்கம் மற்றும் புதிய தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. 

click me!