தீபாவாளி பண்டிகையை கொண்டாடுவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழ்நாடு பொதுசுகாதாரத் துறை அறிவிப்பு…!

By manimegalai aFirst Published Oct 29, 2021, 11:35 AM IST
Highlights

சானிடைசரை பயன்படுத்திவிட்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குழந்தைகளை தனியாக வெடிகளை வெடிக்கவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குழந்தைகளை தனியாக வெடிகளை வெடிக்கவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் கடந்தாண்டு தீபாவளி கொண்டாட்டம் முடங்கிப்போனது. இரண்டாவது அலையும் மெல்ல, மெல்ல தனிந்திருப்பதால் இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல் ஊரடங்கு விதிகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடைவீதிகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பண்டிகை கொண்டாட்டத்தால் மூன்றாவது அலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் அரசுகள் கவனமாக செயல்பட்டு வருகின்றன. இதனிடையே பட்டாசு வெடிக்க பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க தடையில்லை என்றாலும், நேரக்கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. இதனையும் தளர்த்த வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஏழு பேர் பலையானது தமிழ்நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இனியொரு வெடி விபத்து நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள அரசு அதிகாரிகள் மாவட்டந்தோறும் பட்டாசு கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். விதிமுறைகளை மீறி பட்டாசுகளை குவித்து வைத்திருக்கும் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தநிலையில், தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதற்கான வழிமுறைகளை பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தீபாவளி தினத்தன்று மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட துணை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும், தீக்காய சிகிச்சைக்கு தேவையான வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பெரும் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பொதுசுகாதாரத்துறை அவசர கட்டுபாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

அதேபோல், பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளையும் பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், பட்டாசுகளை திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும். பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பட்டாசு வெடிக்குப் பொழுது எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது. குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்காமல் பெற்றோர்கள் உடனிருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டபட்டுள்ளது.

வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். மின்சாரக் கம்பங்கள் அருகே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. சானிடைசரை பயன்படுத்திவிட்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் தீபாவளியன்று வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுசுகாதார துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!