மக்களே உஷார்... தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா... பாதிப்பு 1000ஐ நெருங்கியது..!

By vinoth kumarFirst Published Mar 18, 2021, 9:35 AM IST
Highlights

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1000 நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதில், சென்னையில் மட்டும் பாதிப்பு 395ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1000 நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதில், சென்னையில் மட்டும் பாதிப்பு 395ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில்,  கடந்த 15ம் தேதி 759 பேர், 16ம் தேதி 867 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 945 பேருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. 

இதுகுறித்து, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 71,888 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 945  பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு மிக அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,62,374 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 576 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,43,999 பேர் குணமடைந்துள்ளனர். 5,811 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 8 பேர்உயிரிழந்துள்ளனர். இதை சேர்த்து பலி  எண்ணிக்கை 12,564 ஆக உயர்ந்துள்ளது.

click me!