மீண்டும் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா... சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு...!

Published : Mar 13, 2021, 07:58 PM IST
மீண்டும் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா... சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு...!

சுருக்கம்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700ஐ நெருங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700ஐ நெருங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மாநிலம் முழுவதும் இன்று 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,58,967 ஆக அதிகரித்துள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் இன்று 271 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 251 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,543 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று 512 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 8,41,762 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் தற்போது 4,662 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!