இன்னைக்கு நைட் ரொம்ப கவனமாக இருங்க.. சென்னை மக்களுக்கு தமிழ்நாடு வேதர் மேன் பிரதீப் ஜான் அலெர்ட்..

By Raghupati R  |  First Published Dec 4, 2023, 9:11 PM IST

மிக்ஜாம் புயல் சென்னையை உலுக்கி வரும் இந்த சூழலில், தமிழ்நாடு வேதர் மேன் பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மிக்ஜாம் புயல் தற்போது சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் 100 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு தென்கிழக்கு திசையில் 120 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையைவிட்டு விலகிச்செல்லும் மிக்ஜாம் புயல், தற்போது ஆந்திராவின் நெல்லூர் நோக்கி நகர்ந்து வருவதாகவும், மிக்ஜாம் புயலானது நாளை முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து மிக்ஜாம் புயல் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையம் நாளை காலை 9 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகை மற்றும் புறப்பாடு நடவடிக்கைகள் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11 மணி வரை மூடப்பட்ட நிலையில் நாளை காலை 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து செல்லும் அனைத்து விமானங்களும் நாளை காலை 9 மணி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம். மிக்ஜாம் எதிரொலியால் சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோவையில் இருந்து சென்னை செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கு மொபைல் சிக்னல் இல்லை. ஹாட்ஸ்பாட் பகிர்விற்காக பக்கத்து வீட்டிற்கு வந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் 04.12.2023 அன்று காலை 8.30 மணி வரை 230 மி.மீ பதிவான பிறகு இன்று காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 201 மி.மீ. 03.12.2023 காலை 8.30 மணி முதல் கடந்த 35 மணி நேரத்தில் 430 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும் மழை நள்ளிரவு வரை தொடரும்” என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

click me!