சென்னை கனமழையில் இறந்தவர்கள் எத்தனை பேர்? எந்தெந்த பகுதிகளில் சேதம் அதிகம்? மாநகர காவல்துறை அறிக்கை

By Raghupati R  |  First Published Dec 4, 2023, 7:49 PM IST

சென்னை அதிகனமழை வெள்ளத்தால் இதுவரை 5 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று மாநகர காவல்துறை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மிக்ஜாம் புயல் தற்போது சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் 100 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு தென்கிழக்கு திசையில் 120 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைவிட்டு விலகிச்செல்லும் மிக்ஜாம் புயல், தற்போது ஆந்திராவின் நெல்லூர் நோக்கி நகர்ந்து வருவதாகவும், மிக்ஜாம் புயலானது நாளை முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து மிக்ஜாம் புயல் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 250 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 குழுக்கள் பெங்களூரிலிருந்து வரவழைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்: புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பெருநகர சென்னை மாநகராட்சி & நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் நீர்தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன: அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்படுகின்றன. சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின்(DDRTs) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்: இன்று காலை (04.12.2023), கிண்டி, 5 பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG நிலையத்தின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, அருகில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் பள்ளத்தில் விழுந்தது. மேற்படி நிலையத்தின் இரண்டு ஊழியர்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 16 மரங்கள் அகற்றப்பட்டது நீங்கலாக, கோயம்பேடு. கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு, வள்ளுவர்கோட்ட நெடுஞ்சாலை, சிந்தாதிரிப்பேட்டை N.M. காலனி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை கார்த்தேஜ் ஹோம், M.G.சாலை மற்றும் ராஜலட்சுமி நகர் ஆகிய இடங்களில் விழுந்த மரங்கள் மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினரால் மற்ற துறைகளுடன் இணைந்து அகற்றப்பட்டது.

நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பின்வருமாறு, 1. கணேசபுரம் சுரங்கப்பாதை 2. கெங்குரெட்டி சுரங்கப்பாதை 3. செம்பியம் சுரங்கப்பாதை 4. வில்லிவாக்கம் சுரங்கப்பாதை 5. துரைசாமி சுரங்கப்பாதை 6. மேட்லி சுரங்கப்பாதை 7. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை 8. மவுண்ட்- தில்லைநகர் சுரங்கப்பாதை 9. சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப் பாதை 10, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை 11. C.B. சாலை சுரங்கப்பாதை 12.வியாசர்பாடி சுரங்கப்பாதை 13. திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை 14. RBI சுரங்கப்பாதை 15. கோயம்பேடு. புதுபாலம் சுரங்கப்பாதை 16.சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை 17.சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை ஆகும்.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

சென்னை பெருநகரில் 25 இடங்களில், சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பதிவாகியுள்ள இறப்புகள் : 5 1. H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, வைத்தியநாதன் மேம்பாலம் கீழுள்ள பிளாட்பாரம் அருகே இறந்து கிடந்த பெயர், விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் பிரேதம் கைப்பற்றப்பட்டு. ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2. B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோன் ஸ்கொயர் சாலை ஆவின் பூத் அருகில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பத்மநாபன் (ஆ/50) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

3. J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகரில் முருகன் (ஆ/35) என்பவர் மீது மரம் விழுந்ததால் உயிரிழந்தார். 4. 60 வயது மதிப்புடைய அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் சென்னை பெசண்ட் நகர் ஃபோர்ஷோர் எஸ்டேட் அருகே கண்டெடுக்கப்பட்டு உள்ளது. 5. துறைபாக்கம் பாண்டியன் நகரில் உள்ள செல்வ விநாயகர் கோயில் தெரு சாலையில் நடந்து சென்ற 70 வயது முதியவர் கணேசன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நீரில் மூழ்குதல் / மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விபரம்: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, காரனேஷன் நகரில், மரம் விழுந்து காயமடைந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ரமேஷ், வ/43, த/பெ.பெருமாள் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறைந்த விலையில் அந்தமான் தீவை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

click me!