சென்னை சாலையில் சரிந்த டிரான்ஸ்பார்மர்! மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!

By SG Balan  |  First Published Dec 4, 2023, 7:12 PM IST

சென்னையில் பெய்துவரும் கனமழையால் போயஸ் கார்டனில் ஒரு டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்துள்ளது. மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.


சென்னையில் பெய்துவரும் கனமழைக்கு இடையே போயஸ் கார்டன் கதீட்ரல் சாலையில் உள்ள கஸ்தூரி ரங்கன் 3வது தெருவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஒரு பெரிய டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) சரிந்து விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

இந்த சம்பவம் பிற்பகல் 3.30 மணியளவில் நடந்துள்ளளது. அருகே கண் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், மின்சார விநியோகம் முன்கூட்டியே துண்டிக்கப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

Latest Videos

undefined

வேளச்சேரியில் உள்ள ஐந்து ஃபர்லாங் சாலை சந்திப்பு அருகே மற்றொரு பள்ளம் ஏற்பட்டது. கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த இடத்தில் இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 பேர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழை நிற்க நள்ளிரவு வரை வெயிட் பண்ணுங்க... தமிழ்நாடு வெதர்மேன் கொடுக்கும் மிக்ஜம் அப்டேட்!

The visuals coming from Chennai are scary; a Transformer falls apart after a massive hole suddenly opens up 😮 pic.twitter.com/kVfp27PqJF

— Troll Mafia (@offl_trollmafia)

கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூரில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். உயிரிழந்தவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் மிக்ஜம் புயல் குறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயல் இப்போது பொன்னேரி-ஸ்ரீஹரிகோட்டா பெல்ட் கடல் பகுதியில் உள்ளது என்றும் புயலுக்கு தெற்கிலும் மேற்கிலும் பெரிய மழை மேகங்கள் காணப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

"சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும். புயல் அருகில் இருக்கும் வரை மழை தொடரும். இந்த புயல் நாளை நெல்லூர்-காவாலி பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது." என்றும் தெரிவித்துள்ளார்.

மிசோரம் ஆட்சியைப் பிடிக்கும் சோரம் மக்கள் இயக்கம்! 6 கட்சிகள் கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா!

click me!