கோர்ட் நெருக்கடி.. வேறு வழியில்லாமல் விடுமுறை அறிவித்த தமிழக அரசு.. 10, 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு.!

By vinoth kumarFirst Published Jan 17, 2022, 7:04 AM IST
Highlights

கொரோனா காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களான 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கின்றன. தற்போது இந்த மாணவர்கள் பொங்கல் விடுமுறையில் உள்ளனர். விடுமுறை முடிந்து வரும் 19ம் தேதி 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா அதிகரித்து வருவதால் வரும் 31ம் தேதிவரை அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து வரும் 19ம் தேதியன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த  திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களான 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கின்றன. தற்போது இந்த மாணவர்கள் பொங்கல் விடுமுறையில் உள்ளனர். விடுமுறை முடிந்து வரும் 19ம் தேதி 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து  திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக  அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்;- கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!