10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.. சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன முக்கிய தகவல்..!

Published : Jan 15, 2022, 06:16 AM IST
10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.. சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன முக்கிய தகவல்..!

சுருக்கம்

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 30ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.  

10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடம் நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் குறித்து முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 30ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் 10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து நெல்லையை சேர்ந்த அப்துல் என்பவர் தமிழகத்தில் 10, 11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து , ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே சிறந்தது. மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. அதேபோல், அரசியல் கட்சியினரும் இதே கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடம் நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இவை எல்லாமே கலந்தாலோசிக்கப்பட வேண்டிய விசயம்தான். மாணவர்களுக்குத் தடுப்பூசி மிக முக்கியமான ஆயுதம்.

அதேபோல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கிடைத்து வந்தது. உலக சுகாதார நிறுவனம் கூட மாணவர்களுக்கு மன ரீதியாக கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறியிருந்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனாவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தது. மேலும் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு உள்ளது. அவர்களுக்குத் தடுப்பூசியும் செலுத்த வேண்டியுள்ளது. எனவே இவையெல்லாம் குறித்து ஏற்கெனவே கலந்தாலோசித்து வருகிறோம், வரக்கூடிய கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்படும்" என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!