#BREAKING கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்.. 27,000ஐ நெருங்கிய பாதிப்பு.. தொற்றால் 17 வயது சிறுவன் பலி..!

Published : May 07, 2021, 07:38 PM ISTUpdated : May 07, 2021, 08:24 PM IST
#BREAKING கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்.. 27,000ஐ நெருங்கிய பாதிப்பு.. தொற்றால் 17 வயது சிறுவன் பலி..!

சுருக்கம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,23,965ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 6வது நாளாக பாதிப்பு 6000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 6,738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,70,596ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 1,52,812 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,35,45,987 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 15,525பேர் ஆண்கள், 10,940பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 7,97,824ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,26,103ஆகவும் அதிகரித்து உள்ளது.

இன்று மட்டும் 22,381 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 11,73,439ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 197 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 73 பேர் தனியார் மருத்துவமனையிலும், 124 பேர் அரசு மருத்துவமனையிலும்  உயிரிழந்தனர். இதில், இணை நோய் இல்லாத 47 பேரும்,  17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 15,171ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,35,355 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!