கொலைவெறியில் கொரோனா.. தமிழகத்தில் பாதிப்பு புதிய உச்சம்.. 200ஐ நெருங்கும் உயிரிழப்பு.. பீதியில் பொதுமக்கள்.!

Published : May 06, 2021, 09:00 PM ISTUpdated : May 10, 2021, 07:32 PM IST
கொலைவெறியில் கொரோனா.. தமிழகத்தில் பாதிப்பு புதிய உச்சம்.. 200ஐ நெருங்கும் உயிரிழப்பு.. பீதியில் பொதுமக்கள்.!

சுருக்கம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 24,898 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 24,898 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 24,898 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,97,500ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக  6,678 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,70,596ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 1,52,130 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,35,45,987 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 14,683பேர் ஆண்கள், 10,215பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 7,82,299ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,15,163ஆகவும் அதிகரித்து உள்ளது.

இன்று மட்டும் 21,546 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 11,51,058ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 195 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 81பேர் தனியார் மருத்துவமனையிலும், 114 பேர் அரசு மருத்துவமனையிலும்  யிரிழந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,826ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,31,468 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!