Sunday Lockdown:முழு ஊரடங்கில் வாடகை கார், ஆட்டோ இயக்க அனுமதி.. முக்கிய கன்டிஷன்கள் போட்டு எச்சரித்த காவல்துறை

By vinoth kumarFirst Published Jan 23, 2022, 8:35 AM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா 3-வதுஅலை பரவலை தடுக்க தினமும்இரவு 10 முதல் காலை 5 மணி வரைஇரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் பேருந்து, ரயில் பயணிகள் டிக்கெட்டை காட்டி சாலைகளில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது ஆட்டோ  மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் பயணிகளின் ரயில் டிக்கெட்டின் நகலை  தங்களது  செல்போனில் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை  அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 3-வதுஅலை பரவலை தடுக்க தினமும்இரவு 10 முதல் காலை 5 மணி வரைஇரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் பேருந்து, ரயில் பயணிகள் டிக்கெட்டை காட்டி சாலைகளில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பயணிகளின் வசதிக்காக வாடகை ஆட்டோ, கார்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கை காரணம் காட்டி பயணிகளிடம் 3 மடங்கு வரை அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் வசதிக்காக முழு ஊரடங்கு நாளான இன்று ரயில்,  பேருந்து நிலையங்களில் ஆட்டோ மற்றும் கால்டாக்சிகள் இயங்க அரசு அனுமதித்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் தலைமையில், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலைய ஆட்டோக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சங்கங்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று ஆட்டோ, டாக்சி சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பயணிகளை இறக்கிவிட்டு வாகனங்கள் வெறுமையாக  திரும்பும்போது, ​​போலீசார்  வாகனத்தை நிறுத்தி அவர்களை சிறைபிடிப்பதாக  சங்கங்கள் புகார் கூறியுள்ளனர்.  காவல்துறையினர் சோதனையின்போது வாகன ஓட்டுனர்கள் பயணிகளின் ரயில்  டிக்கெட்டின் நகலை தங்களது மொபலில்  வைத்திருக்குமாறு   அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஒட்டுனர்கள் பயணிகளை அவர்கள் இடத்தில் இறக்கிவிட்டு  திரும்பி  காலியாக வருவதால் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

click me!