எஸ்ஆர்எம் மருத்துவ மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

By Asianet TamilFirst Published Jul 30, 2019, 11:49 AM IST
Highlights

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவ கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து  திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவ கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து  திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொத்தேரியில்  உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 650 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். இதில் இறுதி ஆண்டு படிக்கும் பயிற்சி மாணவர்களுக்கு மத்திய அரசின் ஆணைப்படி மாதம் ரூ. 21 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

ஆனால், தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் இதற்கு படித்த மாணவர்களுக்கும், தற்போது படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பயிற்சி மாணவர்கள் 12 மணி நேரத்துக்கு மேலாக பணி செய்ய வேண்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஊக்கத் தொகை வழங்காத எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இறுதியாண்டு பயிற்சி மருத்துவ மாணவர்கள் 150க்கு மேற்பட்டோர்  காலை, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து மறைமலைந்கர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று எஸ்ஆர்எம் பயிற்சி மருத்துவ மாணவர்களிடம் சமசர பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. மருத்துவமனை நிர்வாகம், அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை ஆர்ப்பாட்டத்தை கைவிட மாட்டோம் என திட்டவட்டமாக கூறி, தொடர்ந்து போராட்ட்தில் ஈடுபட்டனர்.

click me!