பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்.. கதறி துடித்த பெற்றோர்..!

Published : Sep 17, 2021, 06:32 PM IST
பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்.. கதறி துடித்த பெற்றோர்..!

சுருக்கம்

சென்னை சோழவரம் அருகே புதிய எருமைவெட்டிப்பாளையம் தேவனேரி கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் கணேஷ்(15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். 

சென்னையில் வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சோழவரம் அருகே புதிய எருமைவெட்டிப்பாளையம் தேவனேரி கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் கணேஷ்(15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல கணேஷ் பள்ளிக்கு சென்றார். மாலை 3 மணியளவில் வகுப்பறையில் பாடங்களை கணேஷ் கவனித்து கொண்டிருந்தார். 

அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை சகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே  பள்ளி மாணவன் கணேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வடிரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!