சென்னை - புதுச்சேரி இடையே நீராவி என்ஜின் வடிவ சுற்றுலா ரயிலின் சோதனை ஓட்டம்

By Velmurugan s  |  First Published Jul 17, 2023, 1:41 PM IST

சென்னை - புதுச்சேரி இடையே நீராவி என்ஜின் வடிவிலான புதிய சுற்றலா ரயில் சோதனை ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது.


தெற்கு ரயில்வேயின், திருச்சி பொன் மலை, பெரம்பூர் கேரேஜ், ஆவடி பணி மனை இணைந்து, நீராவி  ரயில் என்ஜின் வடிவில், மின்சாரத்தில் இயங்கும் சுற்றுலா ரயிலை வடிவமைத்துள்ளனர். இந்த ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சமீபத்தில் பார்வையிட்டார்.

Latest Videos

இந்த சுற்றுலா ரயிலில் 3 சொகுசு ஏசி பெட்டி, ஒரு பேன்டரி ஏசி பெட்டியும் இருக்கும். சொகுசு இருக்கைகள், சுற்றுலா இடங்களை காணும் வகையில் கண்ணாடி மேற்கூரை ஆகியவையும் இருக்கும். அதிநவீன கழிப்பிட வசதி, பெரிய ஜன்னல்கள், மொபைல் போன் சார்ஜிங் வசதி, அவசரகால கதவுகள், வண்ண வண்ண நிறங்களில் உள் அலங் காரம், அடுத்த நிறுத்தம் மற்றும் ரெயிலின் வேகம் உள்ளிட்ட தக வல் அளிக்க டிஜிட்டல் திரைகள், ஒரு பெட்டி யில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும் வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

நீராவி புகை வெளியேறுவது போல், ஹாரன் ஒலித்தபடி, ஓடும் இந்த சுற்றுலா ரயில், பயணியரிடம் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை - புதுச்சேரி இடையே இன்று  நடந்தது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட ரயிலில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பயணம் செய்தனர். மதியம் 12.30 மணியளவில் புதுச்சேரி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. 

விமான நிலையத்தில் வேலை வாங்தித்தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி - கணவன், மனைவி கைது

தொடர்ந்து ரயிலில் பயணம் செய்து வந்த அதிகாரிகள் புதுச்சேரி ரயில் நிலையம் மற்றும் அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் சட்டமன்றத்திற்கு வந்த தெற்கு ரெயில்வே பொது மேலாளர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அப்போது புதுச்சேரி - திண்டிவனம் - கடலூரை இணைக்கும் ரயில் பாதை திட்டம் குறித்து முதல்வர் ரங்கசாமி கேட்டார்.

இதற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கிழக்கு கடற்கரை சாலை வழியே நிலம் எடுப்பதில் சிரமம் உள்ளதால் மாற்று வழியை தயாரித்து இருப்பதாக கூறி அதற்கான வரைபடத்தை காண்பித்தார். திண்டிவனத்தில் இருந்து ஓமந்தூர்,தைலாபுரம்,பஞ்சவடி, சேதராப்பட்டு,வில்லியனூர் வழியாக கடலூரை அடைய ஆய்வு நடப்பதாக தெரிவித்து அதற்கான வரைப்படத்தை காண்பித்து விளக்கினார்.

திமுக அரசின் கையாளாகாத செயல்பாடுகளால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், காரைக்கால்-பேரளம் வழியாக புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிவித்தார்.புதுச்சேரி ரயில் நிலையத்தை உலகத்தரத்திற்கு மாற்ற தற்போது நடைபெறும் பணிகள் குறித்து முதல்வரிடம் விளக்கியதாகவும் இரண்டரை ஆண்டுகளில் புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறைவு பெறும் என  பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

புதுச்சேரி - திண்டிவனம் - கடலூரை இணைக்கும் திட்டம் பற்றி கூறிய அவர்,புதுச்சேரி ரயில் நிலையம் இறுதி பகுதியில் உள்ளதால் இணைப்பதில் சிரமம் இருக்கிறது.இதனால் சென்னையில் இருந்து வரும் ரயில் புதுச்சேரி வழியாக செல்ல முடியவில்லை.ஹைதராபாத்,மங்களுர் இடையே ரயில் போக்குவரத்து துவங்குவது குறித்தும் பேசினோம் என்றார்.

இதனையடுத்து ரயில் நிலையம் சென்ற அவர் சென்னை திரும்ப புறப்பட்டார். இந்த சோதனை ஒட்டத்தில் சுற்றுலா ரெயிலின் வேகம், ரெயில் நிறுத்தங்களை தேர்வு செய்வது, எவ்வளவு நேரத்தில் புதுச்சேரிக்கு செல்கிறது உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சுற்றுலா தளமாக இருப்பதால் சென்னை டூ புதுச்சேரி வரும் நீராவி என்ஜின் போன்ற வடிவிலான ரயிலால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

click me!