வெள்ளத்தில் மூழ்கி அழியப்போகும் தென்னிந்தியா... அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்..!

By Thiraviaraj RM  |  First Published Aug 20, 2019, 1:07 PM IST

கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்த மழைவெள்ள பேரிடர் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா மூழ்கப்போகிறது என்பதை உணர்த்துவதாக ஆய்வின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
 


கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்த மழைவெள்ள பேரிடர் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா மூழ்கப்போகிறது என்பதை உணர்த்துவதாக ஆய்வின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

இந்தியாவில், இந்த ஆண்டு பருவ மழையின் தீவிர தாக்கத்தால் பல மாநிலங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டமும் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டன.  

லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். வழக்கமாக இந்தியா சந்திக்கும் இயல்பான பேரிடரா இது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. இதற்கு விடையளிக்கும் வகையில் இந்திய வானிலை மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர் காந்திநகர், ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். 

அதில், ‘’மாறிவரும் வானிலை மாற்றங்களால் இந்தியாவில் இனி அடிக்கடி மழை வெள்ள நிகழ்வுகள் ஏற்படும். இதற்கு காரணம் புவி வெப்பமடைதல்தான். இந்த ஆண்டு 2.6 டிகிரி செல்சியஸ் முதல் 8.5 டிகிரி செல்சியஸ் வரை பூமி வெப்பமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. 

இப்படி பூமி வெப்பமடைதல் அதிகரிப்பதால், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால், அதிக மழை பொழிவு ஏற்படும். பூமி வெப்பமடைவதையும், அதிக அளவிலான கார்பன் வெளியேற்றத்தையும் குறைத்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில், வரவிருக்கும் மழை வெள்ளத்தை தடுக்க முடியும். குறிப்பாக ஒன்றரை டிகிரி செல்சியஸ்க்குள் பூமி வெப்பமடைவது நிறுத்தப்பட்டால் மட்டுமே, ஏற்படவிருக்கும் வெள்ள பாதிப்பில் பாதியையாவது குறைக்கலாம். 

1905 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை உள்ள மழைப்பொழிவு விவரங்களை ஆராய்ச்சி செய்து பார்த்த போது, மிதமான மழைப்பெய்யும் நாட்களை விட, மிக அதிக கன மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அதிகமான கன மழையையும், வறட்சியையும் ஒருசேர தென்னிந்தியா சந்திக்கவிருக்கிறது. வெப்ப நிலை மாற்றங்கள் தென் இந்தியாவில் அதிகம் நடப்பதே இதற்கு காரணம். வலுவிழக்கும் பருவ மழைக்காலமும், அதிகரிக்கும் கன மழை நாட்களும் தென் இந்தியாவில் வரட்சியை ஏற்படுத்தும்’’ என அந்த ஆய்வில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

click me!