புலியை அடித்து விரட்டிய சென்னை இளைஞர்கள்... பார்போரை பதறவைத்த துணிச்சல்...!

Published : Aug 19, 2019, 01:14 PM ISTUpdated : Aug 19, 2019, 01:20 PM IST
புலியை அடித்து விரட்டிய சென்னை இளைஞர்கள்...  பார்போரை பதறவைத்த துணிச்சல்...!

சுருக்கம்

கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்திய புலிக்கு  தாங்களே நிவாரணம் வழங்கும் விதத்தில் அவர்களிடம் தலா 500 ரூபாயை வசூலித்துக்கொண்டு சட்ட நடவடிக்கைகள் எதுவுமின்றி , இனி இது போன்று நடந்துக்கொள்ளக்கூடாது என்று அவர்களை அவர்  எச்சரித்து அனுப்பினார்.  

சென்னை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் வேடிக்கை பார்க்க வந்த இளைஞர்கள் சிலர் ,அங்கிருந்த புலியை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்திருந்தனர், அங்கு உள்ள அறியவகை விலங்களை மக்கள் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர், அப்போது அங்குவந்த 6 இளைஞர்கள்,  கம்பி வலைக்குள் உலவிக்கொண்டிருந்த புலிகளை பார்த்ததும் கூச்சல் போட்டதுடன், கல்லால் அந்த புலியைகளை தாக்கினர், அதில் ஒரு புலிக்கு லேசான  காயம் ஏற்பட்டதாக தெரிகிறது, புலிகளை தாக்கிய இளைஞர்களை அங்கிருந்த பொதுமக்கள் கண்டித்ததுடன்

அந்த  6 இளைஞர்களையும் பூங்கா நிர்வாகத்திடம் புகார் அளித்தனர், அதனையடுத்து,  விஜயன், பிரசாந்த், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகிய 6 பேரிடமும், பூங்கா வனச்சரகர் விசாரணை நடத்தினார். பின்னர் அந்த விசாரனையில் பிமா என்ற 6 வயது கொண்ட வெள்ளைப்புலியை தாக்கியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்திய புலிக்கு  தாங்களே நிவாரணம் வழங்கும் விதத்தில் அவர்களிடம் தலா 500 ரூபாயை வசூலித்துக்கொண்டு சட்ட நடவடிக்கைகள் எதும் இன்று , இனி இது போன்று நடந்துக்கொள்ளக்கூடாது என்று அவர்களை அவர்  எச்சரித்து அனுப்பினார்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு