நீட்டும் வேண்டாம், நெக்ஸ்டும் வேண்டாம்..!! மத்திய அமைச்சரின் அறைக்கே சென்று அதிரடிகாட்டிய மருத்துவர்கள் சங்கம்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 28, 2019, 3:52 PM IST
Highlights

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் தலைவர்கள் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனை இன்று  டெல்லியில் சந்தித்தனர்.

நெக்ஸ்ட் மற்றும் நீட் தேர்வுகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் தலைவர்கள் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனை இன்று  டெல்லியில் சந்தித்தனர். 

அப்போது அவரிடம் மனு ஒன்றை அளித்தனர் அதில் தமிழகத்திற்கு நெக்ஸ்ட் தேர்வு கூடாது,  மற்றும் நீட்டிலிருந்து தமிழக அரசின் மருத்துவ இடங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீட்டை அகில இந்தியத் தொகுப்பு இளநிலை ,முதுநிலை  மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் வழங்கிட வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர். இணைப்புப் படிப்புகளை கொண்டுவரக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் , நேரடியாக சந்தித்தனர். 

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் கே.சுப்பராயன் MP, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டிணம் தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ் , ஆகியோர் உடனிருந்தனர்.
 

click me!